Tuesday, 23 June 2009

வார்த்தைகள் - நஜி

என்

ஆழ்ந்த மௌன அணையின்

பின்னே..

தளும்பி நிற்கும்

உக்கிர வார்த்தைகள்..

எப்பொழுதாவது

உடைப்பெடுத்து..

காற்றாற்று

வெள்ளமென

அடித்துச் செல்லும்..

சில நேரங்களில் உன்னை..

சில நேரங்களில் என்னை..

சில நேரங்களில் நம்மை..