முன்னொரு முறை..
பிறந்த புதிதில்..
பிரபஞ்ச வீட்டின்..
வாணத் தரையின்..
நீல நிற விரிப்பின் மேல்..
மேகப் பஞ்சணையில்
தலை வைத்து
படுத்துக் கொண்டு
விட்டத்தின்
வட்ட வடிவ
நிலா ஓட்டையின்
வழியே..
வேறொரு
வெள்ளை நிற
சமாதானத்தின்
உலகை
பார்த்திருக்கிறேன்
நான்..
No comments:
Post a Comment