உன்
ஒவ்வொரு
லௌகீகத்
தோல்வியிலிருந்தும்
மினுமினுக்கும்
சில வஞ்சகக் கற்களை
சேகரித்துக்
கொள்கின்றாய்...
மெல்லச் சேர்த்த
கற்கள் கொண்டு
விசப் படிகள்
அமைத்து
ஓராயிர உழைப்புகளை
அலட்சித்து
ஏறி
உச்சாணியில்
அமர்ந்து
கொள்கின்றாய்...
தடை கற்களை
படி கற்களாக்கியவன்
என்று உலகமே
வியந்து போற்றுகிறது
உன்னை...
என் மயிருக்கு சமம்
என்கின்றேன்
நான்...
No comments:
Post a Comment