Tuesday, 15 February 2011

உன்

ஒவ்வொரு

லௌகீகத்

தோல்வியிலிருந்தும்

மினுமினுக்கும்

சில வஞ்சகக் கற்களை

சேகரித்துக்

கொள்கின்றாய்...


மெல்லச் சேர்த்த

கற்கள் கொண்டு

விசப் படிகள்

அமைத்து

ஓராயிர உழைப்புகளை

அலட்சித்து

ஏறி

உச்சாணியில்

அமர்ந்து

கொள்கின்றாய்...


தடை கற்களை

படி கற்களாக்கியவன்

என்று உலகமே

வியந்து போற்றுகிறது

உன்னை...

என் மயிருக்கு சமம்

என்கின்றேன்

நான்...



Tuesday, 25 January 2011

ஒற்றைக் கொக்கு

ஜாம

வானக் கடலின்

கீழே...

நினைவினில்

கூடு

மறந்து...

பதறிக் கமறி

அலைந்து கடக்கும்

ஒற்றைக் கொக்கின்

துயருக்கான

எனது இரக்கத்தை

யார் கொண்டு சேர்ப்பது

அதனிடத்தில்???