Sunday, 12 December 2010

அமானுக்ஷ்யம்




சூனிய
இருப்பொன்றில்
எனக்கு முன் தோண்றிய
அமானுக்ஷ்யம் ஒன்று
என்னிடம்
உரக்கக் கேட்டது
என்ன செய்து
கொண்டிருக்கிறாய் என்று...

ஏதுமற்ற வார்த்தைகளோடு...
அதையே
உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தேன்
நான்...




அற்புத வாழ்க்கை...


அற்புத
வாழ்க்கைக்கான
எல்லா
வாசல்களும்
திறந்தே
இருக்கின்றன...
என்
உடல்
முழுக்க
சங்கிலியால்
பிணைக்கப்
பட்டிருக்கின்றது...

Tuesday, 19 October 2010

நாத்திகம் - நஜி


இரத்தம் வறண்டு...

வெடிப்புற்ற தோல்களோடு...

மரணத்தை சுமந்தலையும்

முதுமையில்...

எண்ணங்களின்

சூனியக்குழியை...

கேள்விகளற்ற

ஆன்மீகத்தால்...

அள்ளி அள்ளி நிரப்புவான்

மனிதன்

நாத்திகம் மறந்து

அல்லது

மறைத்து...


Thursday, 14 January 2010

வெறித்தல்...

வெறித்தல்...


சட்டென

வெறித்த பார்வையில் நின்றும்

வழிந்தோடுகின்ற

நினைவுகள்!!!

பனித்துளிகளாய்...

இரத்தங்களாய்...

தாகத்தண்ணீராய்...

முடிவுற்ற

காமத்தின் கடைசித் துளியாய்...